பிரான்சில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்... புலம்பெயர்ந்தோர் கைதானதால் பரபரப்பு
பிரான்சில் சனிக்கிழமையன்று இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில், Paris-Dauphine பல்கலைக்கழக மாணவியான Philippine (19) என்னும் இளம்பெண், வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாக மொராக்கோ நாட்டவரான ஒருவர் சுவிட்சர்லாந்தில் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் ஏற்கனவே பெண்களுக்கெதிரான மோசமான குற்றம் ஒன்றில் ஈடுபட்டு சிறை சென்றவர். நாட்டை விட்டு வெளியேற்றப்பட இருந்த அவர் சட்டவிரோதமாக பிரான்சில் வாழ்ந்துவந்துள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
இந்நிலையில், இந்த விடயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அதாவது, சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட வலதுசாரிக் கட்சியான National Rallyயை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோற்கடித்தது நினைவிருக்கலாம்.
ஆனாலும், தற்போது ஆட்சியமைத்துள்ள இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு National Rally கட்சி ஆதரவளித்துவருகிறது.
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கை கொண்ட கட்சியான National Rally, Philippine கொல்லப்பட்ட விடயத்தை வைத்து பிரச்சினை ஒன்றை எழுப்பியுள்ளது.
அதாவது, Philippineஐக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர் புலம்பெயர்ந்தோர் என்பதை காரணமாக காட்டி, புதிய அரசு, புலம்பெயர்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கடினமான முடிவெடுக்கவேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், அப்படி அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர் மிஷெல் பார்னியேர் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவதாகவும் National Rally கட்சித் தலைவரான ஜோர்டன் பார்டெல்லா எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |