அமெரிக்காவை பிறகு...கோவிட் கட்டுப்பாடுகளுக்கு தயாராகிறதா பிரித்தானியா?
அமெரிக்கா இத்தாலியை தொடர்ந்து பிரித்தானியாவும் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கோவிட் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் கொரோனா
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், ஓராண்டுக்கு மேலாக உலகம் முழுவதையும் முடக்கியது, இதில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் பலரும் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்திய சில மாதங்களுக்கு முன்பு தான் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் குறைந்து, உலகம் மீண்டும் அதன் இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஆனால் சீனாவில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா திரிபு வைரஸ் நாடு முழுவதும் ஊரடங்கிற்கு வழிவகுத்துள்ளது.
AP
அத்துடன் இது உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கி இருப்பதால் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகள் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் COVID-19 ஆன்டிஜென் ஸ்வாப்கள் மற்றும் கட்டாய COVID-19 சோதனைகளை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகளுக்கு தயாராகிறதா பிரித்தானியா?
இந்நிலையில் அமெரிக்கா, இத்தாலியை தொடர்ந்து சீனாவில் இருந்து வருபவர்களுக்கு COVID-19 கட்டுப்பாடுகளை விதிக்கவும், COVID-19 பரிசோதனைகளை செய்யவும் பிரித்தானியா வியாழக்கிழமை பரிசீலிக்கும் என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.
Sky News
மேலும் சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கோவிட் கட்டுப்பாடுகளை விதிப்பதில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இத்தாலியை பின்பற்ற வேண்டுமா என்பதை போக்குவரத்துத் துறை, உள்துறை அலுவலகம் மற்றும் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை (DHSC) அதிகாரிகள் இன்று முடிவு செய்வார்கள் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனிடையே பிரித்தானிய பிரதமரின் செய்தி தொடர்பாளர் புதன்கிழமைக்கு முன்னதாக “கோவிட் கட்டுப்பாடுகள் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றல்ல” என்று கூறியதாக அறிக்கை தெரிவித்துள்ளது.