கனடாவில் இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேனை மோதிக் கொன்ற நபர் இணையத்தில் தேடியது என்ன?: வெளியாகியுள்ள புதிய தகவல்
கனடாவில் இஸ்லாமிய குடும்பம் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில், ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9)மற்றும் Afzaalஇன் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதியிருக்கிறார்.
வேன் மோதியதில், Salman Afzaal, அவரது மனைவி Madiha Salman, மகள் Yumna Salman மற்றும் 74 வயதாகும் Afzaalஇன் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
தம்பதியரின் மகன் Fayez Afzal படுகாயமடைந்தான்.
இந்த கோர சம்பவம் தொடர்பாக Nathaniel Veltman (21) என்ற நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது நான்கு கொலைக்குற்றச்சாட்டுகள், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு மற்றும் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், Veltman, dark web என்னும் சட்டவிரோத இணைய சேவையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லாப் டாப் மற்றும் மூன்று மொபைல் போன்கள் மூலம் அவர் dark web இணையசேவையைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்த dark webஇன் சிறப்பு என்னவென்றால், அதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அதிகாரப்பூர்வ அனுமதி அல்லது சிறப்பு சாஃப்ட்வேர் மூலமாக மட்டுமே அதைக் கண்டுபிடிக்க இயலும்.
Veltman வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மொபைல்கள் மற்றும் லாப் டாப்பை ஆராய்ந்த துப்பறிவாளர் ஒருவர், அவற்றில் இஸ்லாமுக்கு எதிரான வெறுப்பைக் காட்டும் விடயங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு துப்பறிவாளர், அவரது மொபைல் மற்றும் லாப்டாப்பில் இருந்த விடயங்கள் Veltmanஇன் நோக்கம் மற்றும் மன நிலைமையை புரிந்துகொள்ளும் விதத்திலேயே அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது அவர் இஸ்லாம் மீது வெறுப்புக் கொண்டவர் என்பதற்கான ஆதாரங்கள், அந்த மொபைல்கள் மற்றும் லாப்டாப் மூலம் அவர் dark webஇல் தேடிய தளங்களில் இருப்பது உறுதியாகியுள்ளது.
அத்துடன், Veltman, இணையத்தை அணுக பல கணக்குகளும், 68 பாஸ்வேர்டுகளும் வைத்திருந்ததையும் துப்பறிவாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
Veltman, ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.