பேரறிவாளன் விடுதலை! முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சட்டப்போராட்டம்
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு தம்மை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மே 11ம் திகதி வரை இந்த வழக்கில் வாதங்கள் வைக்கப்பட்டன. வாதங்கள் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவானை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.
சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால், பரோலில் வந்த பேரறிவாளன், தொடர் சிகிச்சை பெற வேண்டி அவருக்கு முன்னரே 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் 9-ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.