மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்கு தள்ளிய தவெக அரசு
மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
3வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்நாடு அரசு விழாக்களில், விழா தொடங்கும் போது 'தமிழ்த்தாய் வாழ்த்து' முதலாவதாகவும், நிகழ்வின் இறுதியில் தேசிய கீதம் பாடப்டுவதும் பல ஆண்டுகளாக மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த மே 10 திகதி தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போது, முதலில் வந்தே மாதரமும், 2வது தேசிய கீதமும் இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

இந்த விவகாரம் அப்போதே பெரிய சர்ச்சையைக் கிளப்பியிய நிலையில், ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தன.
இது குறித்து அப்போது விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக இசைக்கப்பட்டதில் தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் உடன்பாடில்லை.

இனி வரும் காலங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாது. வழக்கம் போல், தமிழ்தாய் வாழ்த்து நிகழ்வின் முதலிலும், தேசிய கீதம் நிகழ்வின் இறுதியிலும் இசைக்கப்படும்" என உறுதியளித்தார்.
இந்நிலையில், இன்று புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீண்டும், முதலில் வந்தே மாதரமும், 2வது தேசிய கீதமும் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்திருந்த நிலையிலும், மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |