ஜடேஜாவின் ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதா? பிசிசிஐ தலைமை தேர்வாளர் விளக்கம்
ரவீந்திர ஜடேஜாவிற்கு ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் இடம் இருக்கிறது என பிசிசிஐயின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் (Ravindra Jadeja) பெயர் இடம்பெறவில்லை.
இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது காலம் முடிந்துவிட்டதா என கேள்வி எழுந்தது.
அகர்கர் விளக்கம்
இந்த நிலையில் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், ஒருநாள் தொடரில் ஜடேஜா ஏன் தெரிவு செய்யப்படவில்லை என்பதை விளக்கினார்.
அவர் கூறுகையில், ''அவர் (ஜடேஜா) விடுபடவே இல்லை. அவரோ அல்லது அக்சர் படேலோ, டெஸ்ட் சீசன் வரப்போவதால் 3 போட்டிகள் முக்கியமானதாக இருந்திருக்காது என்று நான் நினைக்கிறேன். நாம் அதனை தெளிவுபடுத்த வேண்டும். அவர் இன்னும் சில விடயங்களின் திட்டத்தில் இருக்கிறார். ஒவ்வொரு வீரரும் வெளியேறியதை கடினமாக உணர்கிறார்கள். யார் முன்னால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |