10 வயதில் 50 நாடுகளுக்கு சென்ற லண்டன் சிறுமி: பெற்றோர் கூறும் அந்த காரணம்
தென் லண்டனில் பெற்றோருடன் வசித்துவரும் இந்திய வம்சாவளி 10 வயது சிறுமி, பாடசாலையில் இருந்து விடுப்பு எடுக்காமல் இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கு
10 வயதேயான அதிதி திரிபாதி இதுவரை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கும் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கும் தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றுள்ளார்.
Image: SWNS
தென் லண்டனின் கிரீன்விச் பகுதியில் குடியிருக்கும் தீபக் மற்றும் அவிலாஷா தம்பதி இது தொடர்பில் தெரிவிக்கையில், தமது மகள் உலக நாடுகளுக்கு பயணப்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என குறிப்பிட்டுள்ளனர்.
கணக்காளர்களாக பணியாற்றும் இருவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்தவர்கள் என்பதால் பாடசாலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதில்லை என்பதில் திட்டவட்டமாக இருந்துள்ளனர்.
இதனால், பாடசாலை விடுமுறை நாட்களில் மட்டும் பயணங்களை திட்டமிட்டுள்ளனர். பயணத்திற்காக மட்டும் ஆண்டுக்கு 20,000 பவுண்டுகள் சராசரியாக செலவிட்டுள்ளனர்.
Image: SWNS
இந்தப் பயணங்களால் தங்களது மகள் அதிதியால் வெவ்வேறு கலாச்சாரங்கள், உணவுகள் மற்றும் மக்களைப் புரிந்து கொள்ள முடியும் என நம்புவதாக தீபக் தம்பதி தெரிவித்துள்ளது.
தங்கள் மகள் ஆர்வமும் உற்சாகமும்
சிறுமி அதிதிக்கு 3 வயதிருக்கும் போதே பயணங்களை தொடங்கியதாக கூறும் தீபக் தம்பதி, நேபாளம், இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற பல்வேறு கலாச்சாரங்களைப் பார்த்த தங்கள் மகள் ஆர்வமும் உற்சாகமும் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தீபக் மற்றும் அவிலாஷா தம்பதி குடியிருப்பில் இருந்தே பணியாற்றி வருவதால், போக்குவரத்து செலவுகளை சேமித்து, அதை தங்கள் பிள்ளைகளுக்காகவே செலவிடுவதாக தெரிவித்துள்ளனர்.
Image: SWNS
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்னர் ஒரே ஆண்டில் 12 நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பயணங்கள் தொடர்பில் சிறுமி அதிதி தெரிவிக்கையில்,
தமக்கு மிகவும் பிடித்தமான நாடுகள் அல்லது இடங்கள் என எதுவும் இல்லை என்றாலும், நேபாளம், ஜார்ஜியா, ஆர்மீனியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இன்னொருமுறை செல்ல ஆசை என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |