ஒரு பேரழிவு போல உணர்ந்து என் கைகள் நடுங்கின: பயங்கர காட்டுத்தீயில் தப்பிய இளைஞர்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உண்டான காட்டுத்தீயில் இருந்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் தனது அனுபவத்தை கூறியுள்ளார்.
30,000 பேர் வெளியேற்றம்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பற்றியெரியும் காட்டுத்தீயினால் பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் இருந்து சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தீயை அணைக்கும் முயற்சியில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கடும் பனிப்புயல் நிலவும் சூழலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், புயலின் அபாயம் மிகுந்த மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பயங்கர காட்டுத்தீயில் இருந்து தப்பியது குறித்து 30 வயது இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
மைக் மஹோலியாஸ் என்ற அந்த இளைஞர், காலை 10.30 மணியளவில் புதர் தீப்பிடித்தபோது மீட்டிங்கில் இருந்துள்ளார்.
அப்போது அவர் Sunset Boulevardயில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே சில சைரன்களைக் கேட்கத் தொடங்கியுள்ளார்.
என் கைகள் நடுங்க ஆரம்பித்தன
தப்பியது குறித்து மைக் கூறுகையில், "நான் மீட்டிங்கில் இருந்து விலகி, எனது டவுன்ஹவுஸ் கூரைக்கு ஓட முடிவு செய்தேன். நான் வெளியே நடந்தவுடன் ஒரு பெரிய, வெறும் புகைச்சுவருடன் சந்தித்தேன். மேலும் பாலிசேட்ஸை சுற்றியுள்ள மலைப்பகுதியில் அதிக தீப்பிழம்புகள் இருந்தன.
நகரின் 1,260 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதால், எனக்கு மேலே இரண்டு ஹெலிகொப்டர்கள் பறந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சி ஒரு பேரழிவு போல் உணர்ந்தேன். என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. நான் வியர்க்க ஆரம்பித்தேன். நான் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
எனக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதைக் கண்டு நான் மிகவும் பயந்து அதிர்ச்சியடைந்தேன். புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது என்பதை மூளை உணர்ந்தது.
ஒருபுறம் உறையவைக்கும் பனிப்புயல்... மறுபுறம் பற்றியெரியும் காட்டுத்தீ: தத்தளிக்கும் வல்லரசு நாடொன்று
அங்கிருந்து வேண்டும் என்பதை உணர்ந்ததும், நான் அக்கம் பக்கங்களில் ஓடியவர்களை விட முடிந்த அளவு விரைவாக சென்று காரில் ஏறினேன். அச்சமயம் பல குடும்பங்கள் பீதியடைந்து ஓடி ஓடி பொருட்களை தங்கள் கார்களில் வீச முயற்சிப்பதைக் கண்டேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |