23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 65 வயது முதியவர்! சொன்ன காரணம்
இந்தியாவில் 65 வயது முதியவர் 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
42 வயது வித்தியாசம்
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் நக்கத் யாதவ் (65). இவருக்கும் 23 வயது பெண்ணான நந்தினி என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. நக்கத் யாதவின் முதல் மனைவி உயிரிழந்துவிட்டார்.
அவருக்கு 6 குழந்தைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. முதல் மனைவி இறந்ததால் தனிமையில் வாடியதாகவும் அதன் காரணமாகவே இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும் நக்கத் கூறியுள்ளார்.
telanganatoday
வயது வித்தியாசம்
மேலும் அவர் கூறுகையில், என் மகள்கள் அனைவரும் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர். என் திருமண நிகழ்வில் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர், மேலும் திருமணம் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பு பெண் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சம்மதமும் பெறப்பட்டது என்றார்.
மணப்பெண் நந்தினி கூறுகையில், நக்கத் உடன் திருமணம் நடந்தது மகிழ்ச்சி, வயது வித்தியாசம் பற்றி கவலையில்லை என்று கூறினார்.