அது என் அப்பா இல்லை... வருங்கால கணவர்! 19 வயது பிரித்தானிய பெண் சந்திக்கும் சவால்கள்
பிரித்தானியாவில் 42 வயது நபரை 19 வயது இளம்பெண் காதலிக்கும் நிலையில் தம்பதியின் காதலை விமர்சிப்பவர்களுக்கு இருவரும் பதிலடி கொடுத்துள்ளனர்.
கோர்ட்னி லூயிஸ் மெக்வே (19) என்ற பெண் 42 வயதான நபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர். அதன்படி இவர்களின் வயது வித்தியாசம் கொண்ட பந்தம் அருவருப்பானது என விமர்சித்தனர்.
CourtneyLouiseMcVay
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மெக்வே கூறுகையில், நீங்கள் சட்டப்பூர்வ வயதுடையவராக இருந்தால் எந்தவொரு வயதினரையும் காதலிக்க தடையில்லை. என்னை விட வயதான ஒருவருடன் உறவில் இருப்பேன் என்று தான் எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு இயற்கையாக அமைந்தது.
இதை வெறுப்பவர்கள் மற்றும் என் காதலரை என் தந்தை வயது என கிண்டலடிபவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை, அவர் என் தந்தையில்லை வருங்கால கணவர் என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து மெக்வேவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கொடுத்து பதிவிட்டுள்ளனர்.
CourtneyLouiseMcVay