அமெரிக்காவில் 21 வயது நேபாள மாணவி மீது சரமாரி துப்பாக்கிச்சூடு! இந்திய வம்சாவளி நபர் கைது
நேபாளத்தைச் சேர்ந்த மாணவியொருவர் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரின் குடியிருப்பில் நேபாளத்தைச் சேர்ந்த முனா பாண்டே (21) தங்கியிருந்தார். இவர் படிப்பிற்காக அமெரிக்கா வந்து கல்லூரியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆகத்து 26ஆம் திகதி மாலை முனா பாண்டே பல துப்பாக்கிச்சூடு காயங்களுடன் கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய வம்சாவளி
ஆரம்பகட்ட விசாரணையில் ஷா என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து வடமேற்கு ஹூஸ்டனில் சந்தேக நபர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபி சிங் ஷா (51) என்பது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |