ஒரு வீட்டில் வைத்து இளம்பெண்களை..வாஷிங்டனில் 21 வயது இளைஞர் கைது
அமெரிக்காவில் இளம்பெண்களை வீட்டில் வைத்து துன்புறுத்தியதாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மனிதக் கடத்தல் கும்பல்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள மேன்சன் ஒன்றில் வைத்து, மனிதக் கடத்தல் கும்பல் ஒன்றை நடத்தியதாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நிக்கிதா டியுகலோ (Nikita Tyukalo) என்ற அந்த இளைஞர் பல கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
அவர் வீட்டில் வைத்து இளம் பெண்களை துன்புறுத்தியதாகவும், 'OnlyFans' தளத்தில் உள்ளடக்கத்தைப் பதிவிட அவர்களைக் கட்டாயப்படுத்தியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கருதுவதாக தெரிய வந்துள்ளது.
நான்கு குற்றச்சாட்டுகள்
அக்கம்பக்கத்தினர் அளித்த பல அவசர அழைப்புகளின் (911) அடிப்படையில் கடந்த இலையுதிர் காலத்தில் தொடங்கப்பட்ட விசாரணைக்குப் பிறகு, வெள்ளிக்கிழமையன்று பெல்லிவியூ காவல்துறையினர் கைது செய்ததாக அறிவித்தனர்.
கிங் கவுண்டிக்கான வாஷிங்டன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, நிக்கிதா டியுகலோ என்பவர் மீது இரண்டாம் நிலை மனிதக் கடத்தல் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள், பணமோசடி தொடர்பான ஒரு குற்றச்சாட்டு மற்றும் திட்டமிட்ட குற்றச் செயலை வழி நடத்தியதற்கான ஒரு குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவரது சட்டவிரோத செயல்பாடுகள் குறித்த பல மாத கால விசாரணைக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |