இங்கிலாந்தை சம்பவம் செய்த மூவர்! 556 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் அணி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 556 ஓட்டங்கள் குவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் முல்தானில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷாஃபிக் 102 ஓட்டங்களும், ஷான் மசூட் 151 ஓட்டங்களும் விளாசினர்.
அடுத்த நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுத் ஷகீல் 82 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, அகா சல்மான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 104 (119) ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 556 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 3 விக்கெட்டுகளும், அட்கின்சன் மற்றும் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் அணியில் ஒரே இன்னிங்சில் மூன்று வீரர் சதம் விளாசுவது 4வது முறையாகும். இதற்கு முன்பு 1971 (பர்மிங்காம்), 1987 (ஓவல்), 2022 (ராவல்பிண்டி) ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியின் 3 துடுப்பாட்ட வீரர்கள் சதம் அடித்திருந்தனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |