சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: கட்டுப்படுத்த இரு நாடுகள் இணைந்து ஒப்பந்தம்
கடந்த சில மாதங்களாக சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.
சுவிட்சர்லாந்தும் ஆஸ்திரியாவும் இணைந்து சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையொட்டி, சுவிட்சர்லாந்தும் ஆஸ்திரியாவும் இணைந்து சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, பால்கன் பாதை வழியாக அதிக அளவில் சட்டவிரோத புலம்பெயர்வோர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்துவருகிறார்கள்.
ஆகவே, சுவிட்சர்லாந்தும் ஆஸ்திரியாவும் இணைந்து சட்ட விரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளன.
இது குறித்து சுவிஸ் பெடரல் நிதி மற்றும் பொலிஸ் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சுவிஸ் பெடரல் கவுன்சிலரான Keller-Sutter மற்றும் ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சரான Gerhard Karner ஆகிய இருவரும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு மற்றும் சர்வதேச புலம்பெயர்தல் கொள்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.