CSK வீரர்களிடம் இருந்து தான் எனக்கு நிச்சயமாக கொரோனா பரவியிருக்கும்! உண்மையை உடைத்த விருத்திமன் சஹா
ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான விருத்திமன் சஹா தனக்கு சென்னை அணி வீரர்களிடம் இருந்து தான் கொரோனா பரவிவிட்டதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. முதலில் கொல்கத்தா அணி வீரர் வருண் சக்ரவர்த்திக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின் டெல்லி மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்படி தொடர்ந்து வீரர்களுக்கு கொரோனா பரவியதால், தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத் அணி வீரர் விருத்திமன் சஹா தனக்கு சென்னை வீரர்களிடம் இருந்து தான் கொரோனா பரவியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஏர்போர்ட்டுக்கு சென்று டெல்லிக்கு சென்றோம். அதன் பின்னர் சென்னை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. ஆனால் சிஎஸ்கே அணி போட்டி முடிந்து அந்த வீரர்களுடன் சிறிது நேரம் பழகினேன்.
எனவே அவர்களில் யாராவது ஒருவரிடம் இருந்து தான் எனக்கு கொரோனா பரவியிருக்க வேண்டும். ஏனெனில் ஏற்கனவே சென்னை அணியில் சிலருக்கு அறிகுறிகள் இருந்திருக்கின்றன.
அதனால் நிச்சயம் எனக்கு சென்னை அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்புதான் எனக்கு கொரோனா பரவியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சஹா கூறியுள்ளார்.