ரூ.6800 கோடிக்கு விலை பேசிய மெட்டா - விற்க மறுத்த ஆசிய நிறுவனம்
மெட்டா நிறுவனம் ரூ.6800 கோடிக்கு, ஆசிய நிறுவனத்தை விலைக்கு கேட்ட போது அந்த நிறுவனம் விற்க மறுத்துள்ளது.
விலை பேசிய மெட்டா
பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா(META), ஏற்கனவே Whatsapp மற்றும் Instagram ஆகிய சமூக ஊடகங்களை பெரும் தொகைக்கு விலைக்கு வாங்கியது.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் தென் கொரியாவை சேர்ந்த FuriosaAI என்ற நிறுவனத்தை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
மெட்டா நிறுவனம் 800 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.6855 கோடி) இந்த நிறுவனத்தை வாங்க முன்வந்த நிலையில், FuriosaAI நிறுவனம் விற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
விற்பதற்கு பதிலாக, சுயமான நிறுவனமாக தங்களது வணிகத்தை வளர்க்க முடிவெடுத்துள்ளது.
முதல் ஆசிய நிறுவனம்
தற்போது FuriosaAI அந்த துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களான Nvidia மற்றும் AMD க்கு சவால் விடும் வகையில் வளர்ந்து வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு June Paik என்பவரால் தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாக June Paik, Samsung Electronics மற்றும் AMD (Advanced Micro Devices) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமுடையவர். இந்த நிறுவனத்தில் 140 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.
ஓபன் ஏஐ, கூகிள், டீப்சீக் போன்ற நிறுவனங்களுனான போட்டியில் சிறப்பாக செயல்பட மெட்டா நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது.
இந்த ஆண்டில் பெரிய தரவு மையத்தை உருவாக்குவது போன்ற பணிகளுக்கு $65 பில்லியன்(இந்திய மதிப்பில் ரூ.5.56 லட்சம் கோடி) வரை செலவிடப்படும் என அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனம் முதல் முதலாக வாங்க முன்வந்துள்ள ஆசிய நிறுவனம் இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |