ஒரே நாளில் அமெரிக்காவை பேரழிவுக்கு..தயாராக அவசர எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால், அமெரிக்கா இணையப் பேரழிவுக்கு தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
கடந்த 21ஆம் திகதி, தனது மேம்பட்ட மாதிரிகளில் ஒன்று கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்து, இணையத்தை அணுகி மற்றொரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் அமைப்புகளை ஹேக் செய்ததாக, ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் வெளிப்படுத்தியது.
மனித அறிவுறுத்தல்கள் இன்றி, ஒரு AI மாதிரி மற்றொரு நிறுவனத்தின் தரவுத்தளங்களில் தன்னிச்சையாக ஊடுருவியது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.
இந்த முன்னெப்போதும் இல்லாத மீறல், உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளதுடன், திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்ட ரோபோ கிளர்ச்சிகளுடன் ஒப்பிட்டும் பேசப்படுகிறது.
பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும்
இந்த நிலையில், "செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஹேக்கிங் நிரல்கள், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெருநிறுவன மற்றும் அரசாங்க நெட்வொர்க்குகளுக்குள் ஊடுருவி, முக்கியமான தரவுகளைத் திருடி, Ransomware மூலம் முக்கிய அமைப்புகளை முடக்கி, ஒரே நாளில் ஒரு தேசத்தையே பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும்" என்று DigitalWarefare.com-யின் ஜேம்ஸ் நைட் எச்சரித்துள்ளார்.
மேலும் அவர், 'வளர்ந்து வரும் இந்த ஆயுதங்கள், ஒரு சூப்பர்கம்ப்யூட்டரின் வேகத்தில், வணிகங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில், விரைவில் தன்னிச்சையாக திட்டமிட்டு, செயல்பட்டு தங்கள் உத்திகளை மாற்றியமைக்கும் திறன் கொண்டவை' என்றும் விளக்கியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |