2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு அபாயம்
2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சியால், பிரித்தானியாவில் 20235-க்குள் 3 மில்லியன் குறைந்த திறன் வேலைகள் (Low Skilled Jobs) மறைந்துபோகும் அபாயம் இருப்பதாக தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (NFER) வெளியிட்ட புதிய அறிக்கை எச்சரிக்கிறது.
இந்த ஆய்வின் படி, கைவினைத் தொழில்கள், இயந்திர இயக்கம், அலுவலக நிர்வாகம் போன்ற துறைகள் அதிக ஆபத்தில் உள்ளன.
அதேசமயம், உயர் திறன் கொண்ட தொழில்முறை பணியாளர்களுக்கு தேவைகள் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 2035-க்குள் பிரித்தானிய பொருளாதாரத்தில் 23 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவை பெரும்பாலும் தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப துறைகளில் மட்டுமே இருக்கும்.
இதனால், குறைந்த திறன் வேலைகளை இழக்கும் மக்கள் மீண்டும் வேலை சந்தையில் சேர்வது கடினமாகும் என ஆய்வு எச்சரிக்கிறது.
முன்னதாக, கிங்ஸ் கல்லூரி ஆய்வில், உயர் சம்பளம் பெறும் நிறுவனங்களில் 2021–2025 காலகட்டத்தில் 9.4 சதவீதம் வேலை இழப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
மேலும், பிரித்தானிய அரசு, மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட்கள், உளவியல் நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள் போன்ற பணிகள் AI-க்கு அதிகம் பாதிக்கப்படும் என பட்டியலிட்டுள்ளது.
AI வேலை சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் சிக்கலானது. சில துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்; சில துறைகளில் குறையும். குறிப்பாக, குறைந்த திறன் பணியாளர்கள் மீண்டும் வேலை பெறுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என NFER ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை, AI வளர்ச்சியால் வேலை சந்தையில் சமநிலை குறையும் அபாயத்தை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |