கடற்கரையில் கட்டிப்பிடித்து விளையாடிய மஸ்க், ஜுக்கர்பெர்க்
ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் இடையே நல்லுறவு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
மெட்டா த்ரெட்ஸ் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் தொழில்நுட்ப உலகில் இருவருக்கும் இடையேயான போர் சூடுபிடித்தது.
சரிபார்க்கப்பட்டு கணக்குகளுக்கு மாத சந்தா, ட்வீட் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் என ட்விட்டர் சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய அதே நேரத்தில், மெட்டா த்ரெட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்த ஏராளமாக பயனர்கள் த்ரெட்ஸ் செயலியில் குவிந்தனர்.
தொழில் ரீதியான இந்த போட்டியும் சண்டையும் வைரலாகி வரும் நிலையில் கடற்கரையில் இருவரும் கைகோர்த்து நிற்கும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Twitter@dogeofficialceo
ஆச்சரியமளிக்கும் வகையில் வெளியான அந்த படங்களில், இருவரும் கடற்கரையில் கைகோர்த்து ஓடி, தண்ணீரில் கட்டிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த படங்கள் 'Sir Doge of the Coin' என்ற ட்விட்டர் கணக்கில் வெளிவந்தன.
இவர்கள் இருவரின் இந்தப் படங்கள் லைக்ஸ் மற்றும் ஷேர்களில் சாதனை படைத்துள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
The good ending ❤️ pic.twitter.com/smQjNTzc45
— Sir Doge of the Coin ⚔️ (@dogeofficialceo) July 14, 2023
ஆனால் அந்தப் படங்களை உன்னிப்பாகப் பார்த்தால் தெரிந்துவிடும், அவை செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டவை என்று. படங்களை பார்த்த பலரும் அதனை கண்டுபிடித்தனர். எது எப்படியோ சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |