உலக பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவால் அச்சுறுத்தல்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை
AI Poses Global Economic Threats: உலகளாவிய பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒன்று என இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரிக்கை
வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, சர்வதேச பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கடுமையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், எதிர்காலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடுமையான திருத்தங்கள் குறித்து இங்கிலாந்து வங்கி ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கடிதம் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில், வேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் திடீரென வீழ்ச்சியடைந்தால் அது உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நிதி நெருக்கடியை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து மத்திய வங்கி கடந்த ஜூலையில் உலக அளவிலான சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை குறித்து கவலை தெரிவித்து இருந்ததை தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை வந்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியால், பங்குச் சந்தை குமிழ்கள், சைபர் பாதுகாப்பு அபாயங்கள், மற்றும் நிறுவனங்களின் கடன் சுமை ஆகியவை 3 முக்கிய ஆபத்துகள் நிதி ஸ்திரத்தன்மைக்கு இருப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டிருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |