புதிய AI அம்சங்களை முயற்சிக்க ஆசையா? சாம்சங் கேலக்ஸி M36 5ஜி இந்தியாவில் அறிமுகம்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி M36 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி M36 5ஜி
உலக அளவில் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வரும் தென் கொரிய நிறுவனமான சாம்சங், ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் முன்னணி வகிக்கிறது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன் கேலக்ஸி சீரிஸ் போன்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளன.
Monster circles it, Monster finds it!
— Samsung India (@SamsungIndia) June 27, 2025
Be a connoisseur of pastries. Ask for Baklava when you want Baklava. Get distinct answers with Galaxy M36 5G featuring Circle to Search with Google.
Now that's what we call a #MonsterAIcon. #GalaxyM36 5G #LoveForMonster #CircleToSearch… pic.twitter.com/PXrzrPM6bu
AI-ஆற்றல் பெற்ற அம்சங்கள்
தற்போது, கேலக்ஸி ‘எம்’ வரிசையில் புதிதாக கேலக்ஸி M36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் சர்க்கிள் டு சர்ச் (Circle to Search) மற்றும் ஜெமினி லைவ் (Gemini Live) போன்ற மேம்பட்ட AI அம்சங்கள் இடம்பெற்றுள்ளன, இது பயனர்களின் அனுபவத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துகிறது.
சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: துடிப்பான 6.7 இன்ச் முழு HD+ டிஸ்பிளே.
செயலி: Exynos 1380 சிப்செட் மூலம் இயங்குகிறது.
இயங்குதளம்: சமீபத்திய ஆண்ட்ராய்டு 15 இல் செயல்படுகிறது.
ரேம்: 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் விருப்பங்களில் கிடைக்கிறது.
சேமிப்பு: 128ஜிபி மற்றும் 256ஜிபி உள்ளக சேமிப்பக விருப்பங்கள்.
பின்புற கேமரா: மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது.
முன்புற கேமரா: 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா.
இணைப்பு: அதிவேக இணையத்திற்காக 5ஜி நெட்வொர்க் ஆதரவு.
போர்ட்: யுஎஸ்பி டைப்-சி போர்ட்.
பற்றரி: 5,000mAh சக்திவாய்ந்த பற்றரி.
சார்ஜிங்: 25 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு.
நிறங்கள்: மூன்று கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது.
விலை
சாம்சங் கேலக்ஸி M36 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ₹17,499 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |