இனி ஏடிஎம் மூலமாகவே தங்க நகை கடன் பெறலாம் - தமிழ்நாட்டில் அறிமுகமான AI வசதி
தமிழ்நாட்டில் முதன்முறையாக AI தொழில்நுட்பத்தில் ஏடிஎம் மூலமாகவே தங்க நகை கடன் பெரும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ATM மூலம் நகைக்கடன்
இந்தியாவில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பெரும்பாலான குடும்பங்கள் அவசர தேவைக்காக நகையை அடகு வைத்து கடன் பெறவே அதை பயன்படுத்துகின்றனர்.
தங்க நகை மூலம் கடன் பெறுவதற்கு, வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் அந்த நகையின் தரம் மற்றும் எடை ஆகியவற்றை பரிசோதனை செய்வார். அதனை தொடர்ந்து, பல்வேறு விண்ணப்பங்களில் கையெழுத்து பெறப்பட்டு, ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் AI முறையில், 10 நிமிடங்களில் ATM இயந்திரம் மூலம் நகைக்கடன் பெரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணி நகர் அருகே உள்ள சென்ட்ரல் பாங்க் ஆஃ ப் இந்தியா வங்கி கிளையில் இந்த திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Central Bank of India has launched its AI‑powered Digital Gold Loan Machine at Paramakudi, Madurai.
— Central Bank of India (@centralbank_in) July 2, 2025
Receive your gold loan in 10–15 minutes with Aadhaar authentication, real‑time purity assessment, and direct account transfers.#CentralBankOfIndia #CentralToYouSince1911 pic.twitter.com/jW5VlB1JDW
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அலுவலரான மாதம் வெங்கடராவ், தங்க நகை கடன் ஏடிஎம்ஐ வாடிக்கையாளரின் பயன்பாட்டுக்கு துவங்கி வைத்தார்.
எப்படி செயல்படும்?
இந்த AI திட்டத்தின் மூலமாக நகைக் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை அந்த இயந்திரத்தில் உள்ளிட்ட வேண்டும். அதன் பிறகு தங்க நகையினை இயந்திரத்தின் ஒரு பகுதியில் வைக்க வேண்டும்.
அதன் பின்னர், நகையின் எடை மற்றும் தரத்தை AI மதிப்பீடு செய்து, தற்போதைய மார்க்கெட் நிலவரம் மற்றும் நகையின் எடை ஆகியவற்றிற்கேற்ப வங்கி நிர்ணயம் செய்துள்ள கடன் தொகை திரையில் காட்டப்படும்.
கடன் தொகையில் 10% சதவீதத்தை உடனடியாக பணமாக எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகை வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளப்படும். இந்த நடைமுறை, 10-15 நிமிடங்களில் முடிந்து விடும் என கூறப்படுகிறது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த தங்க நகை கடன் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்த முடியும். இதன் மூலம், வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நேரம் சேமிக்கப்படும் என கூறப்படுகிறது.
கடந்த 6 மாதத்திற்கு முன்னர், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கிளையில், நாட்டிலே முதன்முறையாக இந்த திட்டத்தை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி அறிமுகப்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |