அயோத்தி ராமரையும் விட்டுவைக்காத AI தொழில்நுட்பம்., கண்களைச் சிமிட்டி புன்னகைக்கும் சிலை
ராஷ்மிகாவை மட்டுமல்ல, அயோத்தி ஸ்ரீ ராமரையும் இந்த Artificial Intelligence தொழில்நுட்பம் விட்டுவைக்கவில்லை.
அயோத்தியில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமரின் சிலை கண்களை சிமிட்டி, சிரித்துக்கொண்டே தலையை திருப்பி உலகை பார்ப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அம்பானி-நீதா தம்பதி அயோத்தி ராமருக்கு 33 கிலோ எடையில் தங்க-வைரகிரீடங்கள் கொடுத்தார்களா., உண்மை என்ன?
அயோத்தியில் நிறுவப்பட்டுள்ள மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய ராமர் சிலையின் அழகு உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குழந்தை முகத்துடன் புன்னகையுடன் ஜொலிக்கும் ராமரைக் கண்டு மக்கள் மனம் நெகிழ்ந்தனர். நாட்டின் பெரும்பாலான கமக்கள் தங்கள் Facebook, Instagram, Youtube போன்ற சமூக ஊடகங்களில் ராமர் சிலையின் புகைப்படங்களைப் பகிர்ந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
இதுதவிர செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கலைஞர் உருவாக்கிய இந்த அற்புதமான காணொளி வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
இதில், ராமர் சிலை கண்களை சிமிட்டி, தலையை அசைத்து சுற்றி பார்ப்பது போல் உள்ளது. சுனில் சவுத்ரி என்ற நபர் இந்த காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
I legit got goosebumps 🔥🔥🔥🔥
— Sunil choudhary (@tadasunil98) January 23, 2024
who did this? 😍🥰#Ram #RamMandir#RamMandirPranPrathistha#RamLallaVirajman #AyodhaRamMandir#Ayodha #EarthquakePH #earthquake pic.twitter.com/HZShK26gSj
"இந்த வீடியோவை பார்த்து நான் சிலிர்த்துப் போனேன், இதை யார் செய்தது" என்று கேட்டுள்ளார். காணொளியை பார்த்த பெரும்பாலானோர் அருமை என்றும், கருத்துக்களில் ஜெய் ஸ்ரீ ராம் என பதிவிட்டுவருகின்றனர்.
முன்னதாக இந்த AI தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட் போன்ற சினிமா நடிகைகளின் Deepfake காணொளிகல் மக்களிடையே அருவருப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இப்போது ராமர் சிலை சிரிப்பதுபோன்ற இந்த காணொளியை மக்கள் ரசித்த பார்த்து பூரிப்பு அடைகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ayodhya Ram Temple, Ramlalla AI Video, Aritificial Intelligence Technology, Ram Lalla Idol, Smiling Ram Statue