5 ஆண்டுகளுக்கு முன்பாகவே மார்பக புற்றுநோயை கண்டறியும் AI Technology!
AI தொழில்நுட்பம் மூலம் மார்பக புற்றுநோயை 5 ஆண்டுக்கு முன்பே கண்டறிய முடியும் என்று அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
மார்பக புற்றுநோய்
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் (Massachusetts Institute) மற்றும் ஜமீல் கிளினிக் (Jameel Clinic) ஆகியவை இணைந்து மார்பக புற்றுநோயை கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு மிராய் (Mirai) என்று பெயரும் வைத்துள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் அமெரிக்காவின் பல மருத்துவமனைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் மூலம் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே மார்பக புற்றுநோயை கண்டறிய முடியும்.
இதுகுறித்து அண்மையில் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம், ஓக் புரூக் நகரைதலைமையிடமாகக் கொண்டு ‘ரேடியோலாஜிக்கல் சொசைட்டிஆப் நார்த் அமெரிக்கா' ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், "அமெரிக்காவில் 8 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. இதனை மேமோகிராம் மூலம் கண்டறிய முடியும் என்றாலும், சில நேரங்களில் மருத்துவர்களால் முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை.
இதனை முன்கூட்டியே கண்டறியும் வகையில் ‘மிராய்' என்ற பெயரில்புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே மார்பக புற்றுநோயை கண்டறியலாம். இதனால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், “நாம் நினைப்பதைவிட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |