நாக்கின் நிறத்தை வைத்து நோய்களை கண்டறியும் AI தொழில்நுட்பம்!
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாக்கை ஸ்கேன் செய்வதன் மூலம் 98 சதவீத துல்லியத்துடன் நோய்களைக் கண்டறிய முடியும்.
ஈராக் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) கணினி அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர்.
மங்கலான கண் பார்வை., விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்., பூமிக்கு திரும்புவது எப்போது?
இது நாக்கின் நிறத்தைப் பார்த்து நிகழ்நேரத்தில் 98 சதவீத துல்லியத்துடன் நோய்களைக் கண்டறியும்.
இணை பேராசிரியர் அலி அல்-நஜியின் ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகளின் நாக்கு மஞ்சள் நிறமாகவும், புற்றுநோய் நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் தடிமனான பூச்சுடன் ஊதா நிறமாகவும், மூளை பக்கவாதம் நோயாளிகளுக்கு சிவப்பு நிறமாகவும் இருக்கும்.
2000 ஆண்டுகள் பழமையான சீனாவின் பாரம்பரிய மருத்துவம் தான் நாக்கின் படங்கள் மூலம் நோயைக் கண்டறிய தனக்கு ஊக்கமளித்ததாக நஜி கூறினார்.
5,200 படங்களைப் பயன்படுத்தி நாக்கின் நிறத்தின் அடிப்படையில் நோயைக் கண்டறிவதில் AI மாதிரி பயிற்சி பெற்றது.
படங்களின் அடிப்படையில் என்ன நோய் என்பதை AI சரியாக மதிப்பிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
AI tongue scanner, Artificial Intelligence technology, AI Technology