மனிதர்களின் வேலைகளை AI தொழில்நுட்பம் பறிக்காது: OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் கருத்து
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளை ஒருபோதும் பறிக்காது என OpenAI நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.
AI தொழில்நுட்பம்
ஒட்டுமொத்த இணையத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் OpenAI நிறுவனத்தின் சாட் ஜிபிடி கலக்கி வருகிறது.
பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சாட்பாட் தொழில்நுட்பம் மிகவும் விரைவாகவும், மிகவும் துல்லியமாகவும் விடைகளை தருகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட சாட்பாட் தொழில்நுட்பம் மனித மூளை செயல்திறனை குறைத்து விடலாம் என்ற வாதங்களும், மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகளை இந்த தொழில்நுட்பம் முற்றிலுமாக அழித்து விடும் என்றும் பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
அதே வேளையில் செயற்கை நுண்ணறிவு கொண்ட இத்தகைய சாட்பாட்-களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது.
openai
மனிதர்களின் வேலைகளை AI பறிக்காது
இந்நிலையில் AI தொழில்நுட்பம் கொண்ட சாட்பாட்கள் மனிதர்களுக்கான எத்தகைய வேலைவாய்ப்புகளையும் பறிக்காது என OpenAI நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசிய போது, சாட்பாட்கள் என்றும் மனிதனுக்கு மாற்றாக இருக்காது, உதாரணமாக இன்று பத்திரிகை துறையில் AI தொழில்நுட்பத்தின் சாட்பாட்கள் மிகவும் உதவியாக உள்ளன, இவற்றை கொண்டு அவர்கள் அழகான கதைகளை எழுதுகின்றனர்.
ஆனால் ஒருநாளும் இவை பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் மனிதர்களுக்கு மாற்று அல்ல, பத்திரிகையாளர் தங்கள் கதைகளுக்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் 100 உதவியாளர்கள் போன்றே சாட்பாட் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.