அதிமுக - பாஜக உட்கட்சி மோதல் காமெடி சேனலை பார்ப்பது போல! உதயநிதி கிண்டல்
அதிமுக, பாஜக இடையே உள்ள உட்கட்சி பூசலை காமெடி சேனல் பார்ப்பது போல் பார்த்து செல்ல வேண்டியதுதான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தமிழக மாவட்டம், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஜப்பான் நாட்டின் ’ஜைக்கா’ நிதியில் புதிதாக அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
அங்கு, திடீரென ஆய்வை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி, மருத்துவமனையின் 6 மாடி கட்டடம் கட்டப்படும் பணியை பார்த்தார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,"அதிமுக, பாஜக இடையே உள்ள உட்கட்சி பூசலை காமெடி சேனல் பார்ப்பது போல் பார்த்து செல்ல வேண்டியதுதான். அது எல்லாம் நாடகம். காமெடி பீசு. அவர்கள் வெளிப்படையாகவே மிரட்டிக் கொள்கின்றனர்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "எய்ம்ஸ் மருத்துவனைக்கு டெண்டர் மட்டும் தான் விடப்பட்டுள்ளது. அங்கு போய் பார்த்தால் வெறும் செங்கல் மட்டும் தான் இருக்கும். எய்ம்ஸ் குறித்த ரகசியத்தை கேட்டுள்ளேன்.
தற்போது ஆய்வு செய்துள்ள மருத்துவமனை கொரோனா காலத்தினால் தான் தாமதம் ஆகியுள்ளது. அக்டோபர் மாதம் மருத்துவமனையின் முழு பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |