அதிமுக என்பது அண்ணா திமுக அல்ல.. அமித் ஷா திமுக! உதயநிதி விமர்சனம்
அதிமுக என்பது அண்ணா திமுக அல்ல, அமித் ஷா திமுக என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக என்றால் அமித் ஷா திமுக
தமிழக மாவட்டம், தருமபுரியில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "அதிமுக, பாஜக இடையே காலையில் கூட்டணி இல்லை என்கிறார்கள். மாலையில் கூட்டணி என்கிறார்கள். 4 முன்னாள் அமைச்சர்கள் திருத்துத்தனமாக டெல்லி சென்றுள்ளனர்.
அதிமுக என்பது அண்ணா திமுக அல்ல, அமித் ஷா திமுக. இருவருமே நாடகம் போடுகிறார்கள். தேர்தலின் போது, அதிமுகவும் பாஜகவும் இணைந்து கொள்வார்கள். ஒருவர் திருடர் என்றால் மற்றொருவர் கொள்ளைக்காரர்" என்று பேசினார்.
தேர்தலில் அடிமைகளை விரட்ட வேண்டும்
மேலும் பேசிய உதயநிதி, "கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என பிரதமர் மோடி பேசினார். ஆமாம், திமுக என்ற குடும்பம் பிழைக்கிறது. ஆனால், உங்களால் அதானி குடும்பம் பிழைக்கிறது.
ஒரே விமானத்தில், மோடியும் அதானியும் சென்றனர். இது குறித்த புகைப்படத்துடன் ராகுல் காந்தி விளக்கம் கேட்ட போது, அவருடைய பதவி பறிக்கப்பட்டது. வரும் தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |