செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.., கண்டுபிடிக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்
aiadmk members stage a protest gingee girl missing- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியில், 7 வயது சிறுமி மாயமான வழக்கில் காவல்துறையினரின் செயலற்ற தன்மையைக் கண்டித்து இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செஞ்சி சிறுமி வழக்கு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 12ஆம் திகதி அதிகாலை மாயமானார்.
பிறந்த நாள் கொண்டாடிவிட்டு இரவு பெற்றோருடன் தூங்கிய சிறுமி, மறுநாள் காலையில் காணாமல் போனார்.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, சிறுமி மாயமான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாயமான சிறுமியை விரைந்து கண்டுபிடிக்கக் கோரியும், தமிழக அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில், சிறுமியின் சொந்த ஊரான ஆலம்பூண்டியில், அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் காலை போராட்டம் நடைபெற்றது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |