அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டுமென கடைசி நிமிட வீடியோ: தீக்குளித்து உயிரிழந்த இணைச் செயலாளர்
அதிமுக ஒன்றிணைய வேண்டுமென வீடியோ பதிவு செய்து, தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் நிலவும் குழப்பங்களால்
தஞ்சாவூரின் திருப்பனந்தாளைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளராக இருந்து வந்தார்.
கட்சியில் நிலவும் குழப்பங்களால் அதிருப்தியடைந்த அவர், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
அதில், அதிமுகவினர் இனியாவது ஒற்றுமையாக செயல்பட்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
விபரீத முடிவு
அதன் பின்னர் தன் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
இதனையடுத்து, மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பனந்தாள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |