மிகவும் மோசமாக அவுட் ஆன குயிண்டன் டி காக்! ஸ்மித்தையே மிரள வைத்த மார்க்கம்: வைரலாகும் வீடியோ
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் குயிண்டன் டிகாக மிகவும் மோசமாக அவுட் ஆகி வெளியேறிய வீடியோ காட்சி இணைத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12-க்கான போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் குறைந்த ஓட்டங்கள் எடுத்த போதும், தென் ஆப்பிரிக்கா அணி அற்புதமாக பீல்டிங் செய்தது.
குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த போது, அந்தணியின் சீனியர் வீரரான ஸ்டீவன் ஸ்மித் நிதனனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவுஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
இருப்பினும், இவரை தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரரான அய்டன் மார்க்கம் அற்புதமாக பறந்து கேட்ச் பிடித்து வெளியேற்றினார். இதைக் கண்ட ஸ்மித் அப்படியே ஒரு நிமிடம் மிரண்டே போய்விட்டார்.
மேலும், தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரான குயிண்டன் டி காக், ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து விச்சாளரான ஹசல்வுட் பந்து வீச்சில் மிகவும் மோசமான முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.