ஆர்வம் உள்ளது.,ஆனால் நிதி இல்லை! சாவி ஹெர்னாண்டஸின் விண்ணப்பத்தை நிராகரித்த AIFF
இந்திய தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு புகழ்பெற்ற ஸ்பானிஷ் பயிற்சியாளர் சாவி ஹெர்னாண்டஸின் (Xavi Hernández) விண்ணப்பத்தை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) நிராகரித்துள்ளது.
சாவியை இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிப்பதில் AIFF-க்கு ஆர்வம் இருந்தபோதிலும், அவரது அதிக சம்பளமே முக்கிய தடையாக இருந்துள்ளது. "அவரை நியமிக்க அதிக நிதி தேவைப்படுகிறது" என்று AIFF அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கால்பந்து உலகின் ஜாம்பவானும், பார்சிலோனா அணியின் முன்னாள் மேலாளருமான சாவி, பார்சிலோனாவில் இருந்தபோது ஆண்டுக்கு சுமார் ரூ.81 கோடி (சுமார் $9.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) சம்பளமாகப் பெற்றுள்ளார்.
இந்த பெரும் தொகை, இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு அவரை நியமிப்பது சாத்தியமற்றதாக மாற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |