Job: சம்பளம் ரூ. 24,000.., மதுரை AIIMSல் வேலைவாய்ப்பு
இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), மதுரை 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கலிப்பாணியிடம்
இதில் Project Technical Support II பதவிக்கு மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி
தகுதியான விண்ணப்பதாரர்கள் B.Sc., Diploma, 12th, MLT தகுதிகள் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகபட்ச வயது 30 ஆண்டுகள் இருக்கவேண்டும். மேலும், அரசு விதிகள் படி வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்
Project Technical Support II பணிக்கு ₹20,000/மாதம் + 20% HRA (மொத்தம் ₹24,000/மாதம்) வழங்கப்டும்.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு / நேர்முகம் (AIIMS மதுரை விதிகள் படி). மேலும், இறுதி தேர்வு merit மற்றும் தகுதி படி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ இணையதளம் aiimsmadurai.edu.in சென்று Recruitment பகுதியை திறக்கவும்.
“Project Technical Support II – 2025” இணைப்பை தேர்வு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை சரியான தகவல்களுடன் நிரப்பி தேவையான ஆவணங்களை இணைத்து Submit செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
வருகின்ற அக்டோபர் 17ஆம் திகதி 2025 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |