ஆகாயத்தில் பறந்தபடி தனித்துவமாக திருமணம் செய்த ஜோடி! வைரலாகும் வீடியோ
ஆகாயத்தில் ஏர் பலூனில் பறந்தபடி மணமகனும் மணமகளும் திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஏர் பலூனில் 70 அடி உயரத்தில் மணமகனும், மணமகளும் ஒருவருக்கு ஒருவர் மாலை அணிவித்துள்ளனர்.
தனித்துவமான திருமணம்
துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் பகுதி 7-ல் நடந்த இந்த தனித்துவமான திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. (வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)
IndiaPost
மகளின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த விரும்பியதாக மணப்பெண்ணின் தந்தை, ராஜஸ்தானில் இருந்து ஏர் பலூனை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அந்த ஏர் பலூனில் பறந்தபடி மணமகள் ப்ரீத்தியும், மணமகள் ரவியும் 70 அடி உயரத்தில் ஒருவரையொருவர் மாலை அணிவித்தனர்.
இந்த பலூன் மிகவும் பெரியதாக இருந்தது, அதற்கு ஒரு பெரிய மைதானம் தேவைப்பட்டது. இதற்காக செக்டார்-7 தசரா மைதானத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
IndiaPost
பலூனில் அனல் காற்று நிரப்பப்பட்டு 7 பேர் கொண்ட குழுவினர் கயிற்றின் உதவியுடன் பலூனை பறக்கவிட்டனர். அந்த பலூனில் மணமகன், மணமகன் மற்றும் ஏர் பலூன் விமானி மட்டும் இருந்தனர். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகிவருகிறது.
StarSamachar
Durg जिले में शादी की वरमाला का कार्यक्रम Air Balloon में किया गया...70 फीट की ऊंचाई पर दूल्हा दुल्हन ने एक दूसरे को वरमाला पहनाई..#ViralWedding #ViralVideo #Bride #Groom #ViralWeddingVideo pic.twitter.com/2cxQNrcL7I
— Zee MP-Chhattisgarh (@ZeeMPCG) November 27, 2022