கனடாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 10,000 விமானப் பணியாளர்கள்: லட்சக்கணக்கனோர் பாதிப்பு
கனடாவில் விமானப்பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக புதன்கிழமை இரவே அறிவித்திருந்த நிலையில், இன்று அவர்களுடைய வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது.
துவங்கியது விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்
இன்று சனிக்கிழமை, அதிகாலை 12.58 மணிக்கு ஏர் கனடா நிறுவனத்தின் விமானப் பணியாளர்கள் 10,000க்கும் அதிகமானோர் தங்கள் வேலைநிறுத்தத்தைத் துவங்கியுள்ளார்கள்.
இந்த வேலைநிறுத்தத்தால், நாளொன்றிற்கு 130,000 பயணிகள் பாதிக்கப்பட இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில், வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கனேடியர்களும் அடங்குவர்.
ஊதியம் தொடர்பில் ஏர் கனடா நிறுவனத்துக்கும் பணியாளர் யூனியனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தைத் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |