தரையிறங்கும் போது தீப்பற்றிய Air Canada விமானம்., பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
ஏர் கனடா (Air Canada) விமானமொன்று தரையிறங்கும் போது தீப்பற்றியது, ஆனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
Newfoundland தீவின் St John's நகரத்தில் இருந்து Nova Scotia மாகாணத்தின் Goffs விமான நிலையம் நோக்கி புறப்பட்ட Air Canada விமானம் 2259, தரையிறங்கும் போது ஒருபுறம் சரிவடைந்து, விமானத்தின் ஒரு பகுதி தீப்பற்றியது.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் நிகழ்ந்ததாக விமான நிலைய அறிக்கை தெரிவித்தது.
இந்த விமானம் PAL Airlines மூலம் இயக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தின் காரணமாக Halifax விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஓர் பயணி, தரையிறங்கும்போது விமானத்தின் டயர் முறையாக செயல்படாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக CBC News-க்கு தெரிவித்தார்.
“விமானம் இடது பக்கமாக சுமார் 20-டிகிரி சாய்ந்து, அதன் இறகும் இயந்திரமும் தரையில் உராய்ந்தது. பின்னர் எரிவாயு மற்றும் புகை சாளரங்களுக்குள் நுழைந்தது,” என்று அவர் கூறினார்.
🚨🇨🇦 BREAKING: AIR CANADA FLIGHT LANDS WITH BROKEN LANDING GEAR IN HALIFAX, MINOR INJURIES REPORTED
— Mario Nawfal (@MarioNawfal) December 29, 2024
An Air Canada flight reportedly made an emergency landing at Halifax airport after its landing gear failed.
Despite the malfunction, only minor injuries were reported among… pic.twitter.com/HCtnrwzg9p
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Air Canada Flight Catches Fire On Landing, Air Canada Flight 2259