கனடாவின் ஏர் கனடா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பு
டெல்லியில் இருந்து ரொறன்ரோவுக்கு செல்லும் ஏர் கனடா விமானங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஏர் கனடா வெளியிட்டுள்ளது.
கனடா சமீபத்தில் தான் இந்தியாவில் இருந்து வர மற்றும் இந்தியாவுக்கு செல்லும் நேரடி விமான சேவையை கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.
மொண்ரியல் - டெல்லியை இந்த சேவையானது இணைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொண்ரியலில் வளர்ந்து வரும் இந்திய சமூகத்திற்கு ஏர் கனடா வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை வழங்கவுள்ளது.
இதோடு கூடுதலாக, ரொறன்ரோவில் இருந்து டெல்லிக்கு விமான சேவை அக்டோபர் 15 முதல் வாரத்திற்கு 10 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது.
ஏற்கனவே டெல்லியில் இருந்து வான்கூவர் மற்றும் ரொறன்ரோவுக்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.