துயர நிகழ்ச்சிக்காக பிரித்தானியா புறப்பட்ட தம்பதியர்... திடீரென விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி
மரணமடைந்த தனது பாட்டியின் நினைவுநாளுக்காக, பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து தனது மனைவியான Tara Sharpeஉடன் புறப்பட்டார் Josh Slatkoff.
மொன்றியல் ட்ரூடோ விமான நிலையத்தில் தம்பதியர் விமானத்தில் அமர்ந்திருக்கும்போது திடீரென பொலிசார் விமானத்தில் ஏறியிருக்கிறார்கள்.
இரண்டு பயணிகளை அவர்கள் விமானத்திலிருந்து வெளியேற்ற, மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருக்க, இரண்டு இரண்டு பேராக, பலர் வெளியேற்றப்பட, கடைசியாக Josh, Tara தம்பதியரையும் விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள் பொலிசார்.
இதேபோல் மொத்தம் 25 பேர் விமானத்திலிருந்து வெளியேற்றப்படதுடன், அடுத்த 24 மணி நேரத்துக்கு வேறு விமானங்களில் ஏறவும் அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Courtesy: Charles Contant/Radio-Canada
விமான நிலையத்திற்குள் சென்றபிறகுதான், தாங்கள் அனைவரும் விமானியுடைய உத்தரவின் பேரில் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தம்பதியருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விமானத்திலிருக்கும் சிலர் மாஸ்க் அணியவில்லை என்றும், மதுபானம் அருந்திக்கொண்டிருந்தார்கள் என்றும் விமானி அளித்த புகாரின் பேரில், பொலிசார் அந்த 25 பயணிகளையும் விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்கள்.
ஆனால், விமானத்தில் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறும் Josh, Tara தம்பதியர் தாங்கள் நடத்தப்பட்ட விதத்துக்காக விமான நிறுவனம் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கோரி, விளக்கத்துக்காக காத்திருக்கிறார்கள்.
ஆனால், இதுவரை அவர்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லையாம்!