ஏர் கனடா விமானம் தீயணைப்பு வாகனத்துடன் மோதி விபத்து: பலர் காயம்?
நியூயார்க்கில் ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைப்பு வாகனத்துடன் மோதிய விபத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
தீயணைப்பு வாகனத்துடன் மோதிய விமானம்
இன்று காலை, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலுள்ள LaGuardia விமான நிலையத்தில், ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைப்பு வாகனம் ஒன்றுடன் மோதியுள்ளது.
🚨 BREAKING UPDATE: MULTIPLE CRITICAL PATIENTS AFTER AIR CANADA FLIGHT COLLIDES WITH VEHICLE WHILE LANDING AT LAGUARDIA AIRPORT. POSSIBLE FATALITIES. https://t.co/hZWimAuwe5 pic.twitter.com/62SUgxoUkA
— Breaking911 (@Breaking911) March 23, 2026
விபத்தில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்துள்ளதை, வெளியாகியுள்ள புகைப்படங்களில் தெளிவாக காண முடிகிறது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, LaGuardia விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை, காயமடைந்தவர்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |