தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 800க்கும் அதிகமான ஏர் கனடா ஊழியர்கள் பணியிடை நீக்கம்! முக்கிய தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத 800க்கும் அதிகமான ஊழியர்களை ஏர் கனடா நிறுவனம் பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
கடந்த அக்டோபரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விமான, ரயில் மற்றும் கப்பல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி கொள்கையை அமுல்படுத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தான் மிகப்பெரிய கனேடிய விமான நிறுவனமான ஏர் கனடா தடுப்பூசி போடாத 800 க்கும் மேற்பட்ட ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளது. இந்த தகவலை குளோபல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏர் கனடாவின் பெரும்பாலான ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசிகளை போட்டு கொண்டனர். எங்கள் ஊழியர்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
தடுப்பூசி பெறாத மற்றும் அது தொடர்பில் சரியான காரணம் கூறி விலக்கு பெறாத ஊழியர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என ஏர் கனடாவின் துணை தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ருசோ கூறியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.