நடுவானில் சண்டையிட்ட பிரான்ஸ் விமானிகள்! அதிரடி நடவடிக்கை எடுத்த நிறுவனம்
பறக்கும் விமானத்தில் சண்டையிட்டுக் கொண்ட விமானிகள்
விமானிகள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு
ஜெனிவா-பாரிஸ் விமானத்தில் சண்டையிட்டதற்காக பிரான்ஸ் விமானிகள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சூன் மாதம் ஏர் பிரான்சின் விமானம் ஜெனீவா - பாரிஸ் பயணத்தின்போது, விமானி அறையில் இரண்டு விமானிகள் சண்டையிட்டுக் கொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானி மற்றும் துணை விமானி இடையே தகராறு ஏற்பட்டதாக சுவிஸ் லா ட்ரிப்யூன் நாளிதழின் அறிக்கை தெரிவித்தது. எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
PC: Gonzalo Fuenters/Reuters
பிரான்சின் விமான விசாரணை நிறுவனமான BEA, சில ஏர் பிரான்ஸ் விமானிகள் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிறகு விமானிகளின் இந்த சண்டை வெளியே தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சண்டையிட்ட இரு விமானிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு தணிக்கையை மேற்கொன்டு வருவதாக ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், BEA-யின் பரிந்துரைகளை பின்பற்றுவதாகவும் அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
PC: ERIC PIERMONT/AFP via Getty Images