ஏர் இந்தியா விமான விபத்தில் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு மற்றொரு வருத்தத்திற்குரிய விடயம்
இந்தியாவின் அஹமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களை மற்றொரு விடயம் வருத்தத்திற்குள்ளாக்கியுள்ளது.
மற்றொரு வருத்தத்திற்குரிய விடயம்
இங்கிலாந்திலுள்ள கென்டில் வாழும் மிதென் பட்டேலின் தந்தையான அஷோக் பட்டேலும், தாய் ஷோபனா பட்டேலும் இந்தியா சென்றுவிட்டு திரும்பும்போது, ஜூன் மாதம் 12ஆம் திகதி நிகழ்ந்த விமான விபத்தில் பலியானார்கள்.
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களுடைய உடல்கள் அவர்களுடைய அன்பிற்குரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.
சோகத்துக்குரிய விடயம் என்னவென்றால், ஷோபனாவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பிரித்தானிய அதிகாரிகள், அவரது உடல் இருந்த சவப்பெட்டியில் வேறு சிலரது உடல் பாகங்களும் இருப்பது CT ஸ்கேன் முறையில் ஆய்வு செய்தபோது தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார்கள்.
ஆகவே, பட்டேலின் பெற்றோருக்கு இறுதிச்சடங்கு செய்வது மேலும் தள்ளிப்போயிருக்கிறது.
ஏற்கனவே பெற்றோரை இழந்து வாடியிருக்கும் நிலையில், அவர்களுடைய உடல்களுடன் வேறு சிலரது உடல் பாகங்கள் இருந்தது தெரியவந்த விடயம் அவரது குடும்பத்தினரை வருந்தச் செய்துள்ளது.
DNA பரிசோதனைகள் செய்து, உடல்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம்தான்.
ஆனால், அவர்களை இழந்த அன்பிற்குரியவர்களுக்கு, அவர்களுடைய உடல்களுடன் வேறு சிலரின் உடல் பாகங்கள் கலந்து வந்திருப்பதாக தெரியவந்துள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் பட்டேல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |