ரூ.1,279 க்கு விமான பயணம் - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் அதிரடி சலுகை
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான பயண கட்டணத்தில் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா சலுகை
இந்தியாவை தளமாக கொண்டு இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 500 விமானங்களை இயக்கி வருகிறது.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி, இந்தியா 79வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான கட்டணத்தில் Freedom Sale தள்ளுபடி அறிவித்துள்ளது.
இதன்படி, உள்நாட்டு விமான பயண கட்டணம் ரூ.1,279 லிருந்தும், வெளிநாட்டு விமான பயண கட்டணம் ரூ.4,279 லிருந்தும் தொடங்கும் என அறிவித்துள்ளது.
எப்போது வரை?
ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 15 வரை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த கட்டண சலுகை பொருந்தும் என அறிவித்துள்ளது.
5 million seats on offer this #FreedomSale! 🎉Celebrate the freedom to explore and create #MeaningfulConnections.
— Air India Express (@AirIndiaX) August 9, 2025
💺 Domestic fares from ₹1279
🌏 International fares from ₹4279
📅 Book by 15 Aug 2025 and travel till 31 Mar 2026#FlyAsYouAre and unlock member-exclusive perks… pic.twitter.com/6LLeBefKZO
19 ஆகஸ்ட் 2025 முதல் 31 மார்ச் 2026 வரையிலான விமான பயணங்களுக்கு இந்த தள்ளுபடி கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஏர் இந்தியா இணையதளம் மற்றும் செயலி, பிற முன்பதிவு செயலிகள், டிக்கெட் கவுண்டர், ஏஜென்ட் மூலம் முன்பதிவு செய்யப்படும் அனைத்து டிக்கெட்களுக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை, 5 மில்லியன் விமான டிக்கெட்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |