அந்த பெரும் விபத்து., ரூ.15,000 கோடி இழப்பை எதிர்கொள்ளும் ஏர் இந்தியா
கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒற்றை விமான விபத்து, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஒரே ஆண்டில் ரூ.15,000 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025, ஜூன் 12-ஆம் திகதி, ஏர் இந்தியா விமானம் AI171, Boeing 787-8 Dreamliner, லண்டனுக்கு புறப்பட்ட சில நொடிகளில் அகமதாபாத்தில் விமபத்துக்குள்ளானது.
விமானம் அருகிலிருந்த மருத்துவ கல்லூரி விடுதியில் விழுந்ததில், மொத்தம் 240 பேர் உயிரிழந்தனர்.
இந்த பெரும் விமான விபத்தும், அதைத் தொடந்து நீண்டகால வான்வழி தடைகள் காரணமாகவும், ஏர் இந்தியா நிறுவனம் அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்க உள்ளது.

Bloomberg வெளியிட்ட தகவலின்படி, 2026 மார்ச் 31 முடிவடையும் நிதியாண்டில், குறைந்தபட்சம் ரூ.15,000 கோடி (சுமார் 1.6 பில்லியன் டொலர்) இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி, ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்ட மாரு கட்டமைப்பு முயற்சிகளை முற்றிலும் பாதித்துள்ளது.
குறிப்பாக, விமான விபத்தில் 240-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தது, நிறுவனத்தின் நம்பிக்கையை சிதைத்தது.
மேலும், பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை அறிவித்ததால், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் பாதைகள் நீளமாகி, செலவுகள் அதிகரித்தன. இதனால், இயக்கச் செலவுகள் பெரிதும் உயர்ந்து, வருவாய் குறைந்தது.
ஏர் இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.32,210 கோடி இழப்புகளைச் சந்தித்துள்ளது.
Tata Group மற்றும் Singapore Airlines ஆகிய பங்குதாரர்கள், புதிய மீளுருவாக்க திட்டத்தை கோரியுள்ளனர். ஆனால், ஐந்து ஆண்டுகளில் மட்டுமே லாபம் வரும் என கூறிய திட்டம் நிர்வாக சபையால் நிராகரிக்கப்பட்டது.
தற்போது, Tata Group, CEO Campbell Wilson-க்கு மாற்றாக புதிய தலைமை நிர்வாகியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. Singapore Airlines, 25.1 சதவீத பங்குகளை வைத்திருப்பதால், இந்த இழப்புகள் அதன் வருவாயையும் பாதித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Air India crash 2026 news, Air India Rs 15000 crore loss, Air India financial crisis report, Tata Group Air India losses, Air India deadly crash impact, Air India CEO Campbell Wilson exit, Air India Singapore Airlines stake, Air India aviation industry crisis, India airline crash latest update, Air India recovery plan 2026