பயணிகளுக்கு 25% வரை தள்ளுபடி வழங்கும் ஏர் இந்தியா.., ஆனால் இவர்களுக்கு மட்டுமே
டாடா குழுமத்தின் விமான நிறுவனமான ஏர் இந்தியா தனது பயணிகளுக்கு ஒரு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது.
தள்ளுபடி வழங்கும் ஏர் இந்தியா
ஏர் இந்தியா தனது அனைத்து விமான டிக்கெட்டுகளின் அடிப்படை விலையிலும் 25 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.
ஏர் இந்தியாவின் இந்த சலுகை உள்நாட்டு விமானங்கள் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு பொருந்தும்.இதன் மூலம் பயணிகள் economy class மற்றும் business class டிக்கெட்டுகளில் தள்ளுபடியைப் பெறலாம்.
ஆனால், இந்த சலுகை அனைவருக்கும் இல்லை, 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே.
ஏர் இந்தியாவின் இந்த சலுகையின் கீழ், அனைத்து சர்வதேச விமான டிக்கெட்டுகளின் அடிப்படை விலையில் 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.
முன்பதிவு செய்த பிறகு, பயணிகள் தங்கள் பயண திகதியை மாற்ற விரும்பினால், ஒரு முறை இலவசமாக மாற்றலாம். ஒவ்வொரு பயணியும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் 10 கிலோ கூடுதல் சாமான்கள் அல்லது ஒரு கூடுதல் பையை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
உள்நாட்டு விமானங்களில், மூத்த குடிமக்கள் அடிப்படை கட்டணத்தில் 25% வரை தள்ளுபடி பெறுகிறார்கள், மேலும் UPIPROMO என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி UPI வழியாக பணம் செலுத்தும்போது ரூ.200 அல்லது அதற்கு மேல் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.
சர்வதேச விமானங்களில், மூத்த குடிமக்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 10% வரை தள்ளுபடியும், அதே விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தி UPI பணம் செலுத்தினால் ரூ.2000 வரை தள்ளுபடியும் கிடைக்கும்.
இது சில சமயங்களில் பயணிகளுக்கு மொத்த கட்டணத்தில் 50% வரை சேமிக்கவும் உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |