லண்டன் புறப்பட்டபோது 260 உயிர்களை பறித்த கோர விமான விபத்து: அடிக்கடி மருத்துவ விடுப்பெடுக்கும் விமானிகள்
அகமதாபாத் விமான விபத்திற்கு பின் மருத்துவ விடுப்பில் செல்லும் விமானிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
260 பேர் பலி
கடந்த 12ஆம் திகதி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் லண்டன் புறப்பட்டது.
ஆனால் சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியதால் 241 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் உயிர் தப்பினார்.
மேலும், விமானம் மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்ததில், அங்கிருந்த சிலரும் இறந்ததால் பலி எண்ணிக்கை 260 ஆக உயர்ந்தது.
இந்த சம்பவம் இந்திய வரலாற்றில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய மோசமான விமான விபத்தாக பதிவானது.
அடிக்கடி மருத்துவ விடுப்பு
இந்த நிலையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா (Air India) விமானிகள் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வதாக தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மொகோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
"ஏர் இந்தியா நிறுவனத்தின் AI-171 விமான விபத்திற்குப் பிறகு, உடல்நலக்குறைவால் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்லும் விமானிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக, அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி மொத்தம் 112 விமானிகள் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |