ஏர் இந்தியா விமான விபத்து: உயிர் பிழைத்த ஒரே நபர் இப்போது எப்படி இருக்கிறார்?
இந்தியாவை உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்பவர் தற்போது எப்படி இருக்கிறார்?
விஸ்வாஸ்குமார் ரமேஷ் தற்போது எப்படி இருக்கிறார்?
விஸ்வாஸ்குமார் ரமேஷிடம் பிபிசி நடத்திய சிறப்பு நேர்காணல் அவர் அளித்த பதில்கள் அனைவரது இதயத்தையும் உலுக்கியுள்ளது.
அதில், நான் மட்டுமே உயிர் பிழைத்துள்ளேன். என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு அதிசயம். தான் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி என தெரிவித்துள்ளார்.
எனக்கு ஆதரவாக இருந்த என்னுடைய சகோதரனை நான் இழந்து விட்டேன், கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய சகோதரர் எப்போது என்னுடன் இருந்தார்.

நான் இப்போது மிகவும் தனியாக இருக்கிறேன், என் மனைவி மற்றும் மகனிடம் பேச முடியவில்லை. கடந்த 4 மாதங்களாக என்னுடைய அம்மா தினமும் கதவுகளுக்கு பின்னால் பேசாமல் அமர்ந்திருக்கிறார்.
விபத்துக்கு பிறகு, உடல் மற்றும் மன ரீதியான சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்த விஸ்வாஸ்குமார் ரமேஷ், இரவு முழுவதும் அதைப் பற்றியே யோசித்து கொண்டு இருக்கிறேன்.

இது ஒவ்வொரு நாளும் முழு குடும்பத்திற்கும் வேதனையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் உடல் காயங்கள் குறித்து பேசிய விஸ்வாஸ்குமார் ரமேஷ், தனக்கு கால்கள், தோள்கள், முழங்கால்கள் மற்றும் முதுகில் வலி இருப்பதாகவும், விபத்துக்கு பிறகு வேலை செய்யவோ, வாகனம் ஓட்டவோ முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
BBC செய்தி ஊடகத்திற்கு நன்றி!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |