பிரியாணி முதல் பொடி இட்லி வரை… அசத்தும் ஏர் இந்தியாவின் உணவு பட்டியல்
ஏர் இந்தியா விமான நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஏர் இந்தியா விமானத்தில் வெளிநாடு செல்லும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தென்னிந்திய உணவுகளை இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள உணவு பட்டியலில், தமிழ்நாடு உணவுகளான மிளகாய்ப் பொடி இட்லி, பரோட்டா, மசாலா தோசை, கிச்சடி, முந்திரி உப்புமா, மூன்று வகை சட்னி மற்றும் சாம்பார் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டு பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் அசைவ உணவுகளாக பிரியாணி, மலபாரி கோழிக் கறி, சிக்கன் பிம்பாய் போன்றவையும் ஏர் இந்தியா வெளியிட்ட புதிய உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |