சும்மா பேசிக்கொண்டிருக்காமல் உதவி செய்யுங்கள்: விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வருத்தம்
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்களின் குடும்பத்தினர், பிரித்தானிய அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
சும்மா பேசிக்கொண்டிருக்காமல் உதவி செய்யுங்கள்
கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்களில் அகீல் நானாபாவா, ஹன்னா வோராஜி மற்றும் மற்றும் தம்பதியரின் நான்கு வயது மகளான சாரா நானாபாவா ஆகிய்றும் அடங்குவர்.
இந்தியா சென்றுவிட்டு Gloucesterஇலுள்ள தங்கள் வீட்டுக்கு புறப்பட்டபோது அவர்கள் பயணித்த விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், அகீலின் சகோதரர் ஹம்சா, தாங்கள் DNA பரிசோதனைக்காக மாதிரிகள் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் தங்கள் குடும்பத்தினரின் உடல்கள் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவரது குடும்ப செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, நாங்கள் அற்புதங்களை கேட்கவில்லை, நாங்கள் பிரித்தானிய அரசு எங்களுக்காக இரக்கம் காட்டவேண்டும், நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம். உண்மையில், நாங்கள் முற்றிலும் கைவிடப்பட்டதாக உணர்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசு அங்கிருந்துகொண்டு பெரிய உரையாற்றிக்கொண்டிருக்கிறது. சும்மா பேசிக்கொண்டிருக்காமல் இங்கே வந்து உதவுங்கள் என்கிறார் அகீல்.
தங்கள் குடிமக்கள் உயிரிழந்த நிலையிலும், அன்பிற்குரியவர்களை இழந்து வேதனையில் இருக்கும் குடும்பத்தினரை இதுவரை பிரித்தானிய அரசு சார்பில் யாரும் தொடர்புகொள்ளக்கூட இல்லை என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |