மீண்டும் முழங்கிய ஏர் சைரன் சத்தம்: மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்
வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என விமானப்படை தளத்திலிருந்து எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து இன்று காலை சண்டிகரில் மீண்டும் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏவுகணை மற்றும் ட்ரோன்
சண்டிகர் நிர்வாகம் தங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்துள்ள தகவலில், மக்கள் குடியிருப்புக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மொட்டை மாடியில் இருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று மாலை சண்டிகரில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன, அத்துடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
பஞ்சாபின் பதான்கோட்டில் ஷெல் தாக்குதல் நடந்ததாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, நெருக்கடியான சூழ்நிலை காரணமாக சண்டிகரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மூடப்பட்டும் என சண்டிகர் துணை கமிஷனர் நிஷாந்த் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
*ALERT*
— Chandigarh Admn (@chandigarh_admn) May 9, 2025
An Air warning has been received from Air force station of possible attack.
Sirens are being sounded.
All are advised to remain indoors and away from balconies.
DC Chandigarh
முன்னதாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா, அர்னியா, சம்பா மற்றும் ஹிராநகர் ஆகிய இடங்களில் நேற்று மாலை பாகிஸ்தான் குறைந்தது எட்டு ஏவுகணைகளை ஏவியது. அந்த ஏவுகணைகள் அனைத்தும் ஜம்மு மீது இடைமறிக்கப்பட்டன.
15 இடங்களில்
ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பஞ்சாபின் அமிர்தசரஸ் மற்றும் ஹரியானாவின் பஞ்ச்குலாவிலும் மின்தடை அமுல்படுத்தப்பட்டது. இதனிடையே, மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தியதாக இந்திய ராணுவம் இன்று காலை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் துருப்புக்கள் பல முறை போர் நிறுத்த மீறல்களை மேற்கொண்டதாகவும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில், இந்தியா முழுவதும் 15 இடங்களில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்க பாகிஸ்தான் முயன்றது. அவந்திபோரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதன்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, அடம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தரலை மற்றும் புஜ் உட்பட 15 இலக்குகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
OPERATION SINDOOR
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 9, 2025
Pakistan Armed Forces launched multiple attacks using drones and other munitions along entire Western Border on the intervening night of 08 and 09 May 2025. Pak troops also resorted to numerous cease fire violations (CFVs) along the Line of Control in Jammu and… pic.twitter.com/WTdg1ahIZp
கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |